திருச்சிராப்பள்ளி, ஆக.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜூக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழக முதலமைச்சர் அறிவித் துள்ள சட்டமன்ற தொகுதியில் தீர்க்கப் படாத மக்கள் கோரிக்கைகள் 10-ஐ தேர்ந்தெடுப்பது என்ற முறையில், திருச்சி கிழக்கு தொகுதியில் நீண்ட கால மாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலங்களில் ஏழை, எளிய மக்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வரு கின்றனர். இதில் கீழபுதூர் கிருஷ்ணன் கோவில் தெரு, பிள்ளை மாநகர், கல் பாளையம், வரகனேரி பெரியார் நகர், தாராநல்லூர் காமராஜநகர், சூரன் சேரி, அண்ணா நகர், சத்தியமூர்த்தி நகர், கமலா நேருநகர், கல்யாண சுந்தரபுரம், ஜீவாநகர், வள்ளுவர் நகர், ஆழ்வார் தோப்பு, பென்சனர் காலனி, கொட்டப்பட்டு ஜெ.ஜெ.நகர், சுந்தர்ராஜ் நகர், வில்வ நகர், ஏர்போர்ட் முஸ்லிம் தெரு, அலிகான்குளம், ஸ்டார் நகர், செம்பட்டு புதுத்தெரு, பட்டத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை குடிமனை பட்டா வழங்கப்படவில்லை. பல இடங்களில், 50 ஆண்டுகளுக்கு மேல் குடிசை மாற்று வாரிய இடத்தி லேயே இருந்து வரும் அனைவருக்கும் குடிமனை பட்டா கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது அனைத்து குடியிருப்பிற்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் கொடுத்திருந்தீர்கள். திருச்சி கிழக்கு தொகுதியில் சுமார் 30 சதவீதத்திற்கு மேல் மூன்றில் ஒரு பகுதி மக்கள் புறம்போக்கிலேயே வசித்து வருவதாக தெரிகிறது. எனவே தாங்கள் தலையிட்டு 10 கோரிக்கையில் முதன்மை கோரிக்கையாக இதனை அரசுக்கு பரிந்துரை செய்து குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.