நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர், அக்.10- நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகி றது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் உரிய முறையில் சட்டவி ரோதமாக கழிவுநீர் ஆற்றில் வெளி யேற்றும் நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் வரை நொய்யல் ஆறு சென்று நிறைவடைகி றது. இந்த நொய்யல் ஆறு திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாய்கிறது. கடந்த சில ஆண் டுகளுக்கு முன்பு சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டதால் நொய்யல் ஆறு மாசடைந்தது. அதன்பின் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பனி யன் உற்பத்தி நிறுவனங்களுக்கு துணிக ளுக்கு நிறமேற்றித் தர செயல்படும் சாய சலவை ஆலைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் ஜீரோ டிஸ் சார்ஜ் முறையில் சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சி அடிப்படையில் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பது பெரும் அள வில் தடுக்கப்பட்டது. இருப்பினும் சில இடங்களில் முறைகேடாக செயல்படும் சாய சலவை ஆலைகள், பட்டன் ஜிப் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அவ்வப்போது நொய்யல் ஆற்றில் கலக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வப்போது மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பல்லடம் சாலை தென் னம்பாளையம் உழவர் சந்தை அருகே நொய்யல் ஆற்றில் வியாழனன்று இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவு நீர் கலந்து ஓடியது. இதனை கண்ட அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்தனர். மேலும், சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் செல் லும்போது நிலத்தடி நீர்மட்டம் பாதிக் கப்படுவது மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளில் நொய்யல் ஆற்று நீரை கால்நடைகள் அருந்துவதால் கால்ந டைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படு கிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை அலுவலர்கள் உரிய முறையில் தொடர்ந்து ஆய்வு மேற் கொள்ள வேண்டும், விதிமுறையை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்தனர்.