tamilnadu

img

அரசு விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

அரசு விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை நாளான இன்று, சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் அப்பள்ளிகளில் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.