tamilnadu

img

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு ...

சென்னை:
மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவ,மாணவிகள் மனஉளைச்சலில் உள்ளனர். இதனைப்பற்றிகவலைப்படாமல் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 அன்று தொடங்கும் என்று அறிவித்தது. 

இதற்கு மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிகள்மீண்டும் துவங்கி, இரு வாரங்களுக்கு பிறகே பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் மாணவர்களின்  உயிரோடு விளையாட வேண்டாம் என்று வலியுறுத்தினர். தேர்வை தள்ளிவைக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  முக்கிய ஆலோசனை நடத்தினார். 

அமைச்சர் பேட்டி
ஆலோசனைக்குப் பின்னர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று  ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி பத்தாம்தேதி வரையிலும் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புபொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறும்.  15ஆம் தேதி மொழிப்பாடம் 17 ஆம் தேதி ஆங்கிலம், 19 ஆம் தேதிகணிதம், 20ஆம் தேதி விருப்பப்பாடம், 22 ஆம் தேதி அறிவியல், 24 ஆம் தேதி சமூக அறிவியல், 25ஆம் தேதிதொழிற் பாடத்திற்கான தேர்வு நடைபெறும்.  தேர்வுஎழுதுவதற்கு ஒவ்வொரு அறையிலும் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 5 கிலோமீட்டர் சுற்றளவுள்ள பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உரிய வசதி செய்யப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பிற்கான விடுபட்ட தேர்வுகள் ஜூன் 16 ஆம் தேதியும் பிளஸ்-2 மறு தேர்வு ஜூன் 18-ஆம் தேதியும் நடைபெறும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்ப்புக்கு பணிந்த அரசு
முன்னதாக, இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்தோடு, அனைத்து ஆசிரியர் இயக்கங்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் கல்வியாளர்களும் எதிர்க்கட்சிகளும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜுன் 1 அன்று நடத்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்திருந்தன. மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை கைவிட்டு, பள்ளி துவங்கிஒரு குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு தேர்வினை நடத்தலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டகட்சிகளும் வலியுறுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.