சென்னை:
போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை ஜூன் 2 செவ்வாயன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம்வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களுக்கு ஓய்வூதியபணப் பலனாக 497.32 கோடி ரூபாயைகடந்த அதிமுக அரசு வழங்கவில்லை.ஓய்வூதியர்களின் தொடர் போராட்டத்தையடுத்து நிலுவைத் தொகையை வழங்க அதிமுக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை (போக்குவரத்து துறை அரசாணை 34, 26.2.2021) வெளியிட்டது. ஆனால் பணத்தை வழங்கவில்லை.
இந்நிலையில், அரசாணைப்படி பணப்பயன் வழங்கக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மே 24 ஆம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் கடிதம் எழுதியிருந்தார்.இதனையடுத்து ஓய்வூதியர் களுக்கு வழங்க வேண்டிய 497.32 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைஜூன் 2 அன்று முதலமைச்சர் வழங்கினார். துவக்க அடையாளமாக 6 ஓய்வூதியர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர். எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சருக்கு நன்றிதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின்பொதுச் செயலாளர் கே.கர்சன் விடுத்திருக்கும் அறிக்கையில், “எங்களது அமைப்பின் கோரிக்கையை ஏற்று நிலுவைத் தொகையை விரைந்து வழங்கியமுதலமைச்சருக்கு நன்றி.அதேசமயம், அரசாணை 34ல், 2020 மே - டிசம்பர் வரை விருப்ப ஓய்வு, பணியில் இறந்தவர்களுக்கு பணப்பலன்களை வழங்க 185 கோடியே 38 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. அந்தத் தொகையையும் விரைந்து வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.