tamilnadu

img

பல்கலைக்கழக வளாகங்களில் வெளிநபர்களை அனுமதிக்க கூடாது! - உயர்கல்வித்துறை செயலாளர்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வெளிநபர்களை அனுமதிக்க கூடாது என உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  இவ்வழக்கில் ஞானசேகரன் (37) என்பவர் கைது போலீசார் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, காவல் துணை ஆணையர்கள் சிநேக ப்ரியா, ஜமான் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. 
இந்த நிலையில், உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வெளிநபர்களை அனுமதிக்க கூடாது என உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்; பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனைத்து பல்கலைக்கழகங்களும் மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கல்வி நிலையங்களுக்குள் வரும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு செய்து கட்டாயம் பராமரிக்க வேண்டும். வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும். புகார்கள் எழுந்தால் கடுமையான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.