பார் கவுன்சில் எதிரே என்எஸ்சி போஸ் சாலை
சென்னை உயர்நீதிமன்றம் பார் கவுன்சில் எதிரே என்.எஸ்.சி போஸ் சாலை ஓரம் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்லும் இந்த நடைபாதைக்கு அருகில் தேங்கிய சாக்கடை நீரில் லட்சக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகிறது. தொற்றுநோய்க்கு முக்கிய புள்ளியாக இந்த இடம் மாறுவதற்குள் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி வணிகர்களும் வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.