குமரி : சின்னமுட்டம் பகுதியிலுள்ள மீன்பிடித்துறைமுகம் அருகே மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு திடீரென்று தீப்பிடித்ததில் ஒரு கோடி மதிப்பிலான விசைப்படகு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. படகில் சென்ற மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று தகவல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் பகுதியில் மீன்பிடித்துறைமுகம் உள்ளது. அங்கே சுமார் 350 விசைப்படகுகள் உள்ளது. அங்குள்ள மீனவர்கள் தினசரி இரவு மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று அதிகாலையில் கரைக்குத் திரும்புவது வழக்கம். அதே போல் நேற்று இரவு 350 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இன்று அதிகாலை கரைக்குத் திரும்புகையில் 10 நாட்டிகள் தொலைவில் வரும்போது , ஆழ்கடலில் திடீரென்று ஒரு விசைப்படகு தீப்பிடித்தது. படகிலிருந்த 14 மீனவர்கள் கடலில் குதித்துத் தப்பித்து விட்டனர். இருப்பினும் ஒரு கோடி மதிப்பிலான விசைப்படகு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து கடலோர காவல்படையினர் மற்றும் கன்னியாகுமரி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.