இன்ஸ்டாகிராமின் டைரைட் மெசேஜில் (Direct Message) மொழிபெயர்க்கும் அம்சம் உள்ளிட்ட புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமில், பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத் தினருடனான உரையாடல்களை மேலும் எளிதாக்கும் வகையில், டைரைட் மெசேஜில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. டைரைட் மெசேஜில் மொழிபெயர்ப்பு அம்சம், மெசேஜ் களை பின் செய்யும் அம்சம் (Pin Messages), கியூ.ஆர் கோடு (QR code) மூலம் குரூப் சாட்களில் (Group Chat) இணையும் அம்சம், மியூசிக் ஸ்டிக்கர்ஸ் ஆகிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மெசேஜ் மொழிபெயர்ப்பு: ஆங்கிலம் தவிர்த்துப் பிற மொழி களில் அனுப்பப்படும் மெசேஜ்களை மொழிபெயர்ப்பு செய்ய, அந்த மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி னால், “Translate” எனும் ஆப்ஷன் காண்பிக்கும். அதனை கிளிக் செய்தால் பிற மொழிகளில் உள்ள மெசேஜ், ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படும். பின் மெசேஜஸ் அம்சம்: வாட்ஸ்அப்பில் உள்ளது போல இன்ஸ்டாகிராமிலும் சாட்களை பின் செய்யும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மெசேஜ்களையும் பின் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. ஒரு சாட்டில் 3 மெசேஜ்களை மட்டுமே பின் செய்ய முடியும். மெசேஜை நீண்ட நேரம் அழுத்தி னால், பின் ஆப்ஷன் காண்பிக்கும், அதனை கிளிக் செய்து, குறிப்பிட்ட 3 மெசேஜ்களை பின் செய்துகொள்ள லாம். கியூ.ஆர் கோடு அம்சம்: இன்ஸ்டாகிராமில் குரூப் சாட்டை தொடங்கிய பின்பு, அதில் மேலும் சிலரை இணைப்பதற்கென கியூ.ஆர் கோடு invite link அறி முகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றவர்களை குரூப் சாட்டில் இணைக்க, குரூப் பெயரை கிளிக் செய்தால் invite link-ஐ காண்பிக்கும். அதனை கிளிக் செய்தால், குரூப் சாட்டில் இணைப்ப தற்கான கியூ.ஆர் கோடு காண்பிக்கும். இந்த கியூ.ஆர் கோடை நண்பர்களுக்குப் பகிர்ந்து, குரூப்பில் இணைத்துக் கொள்ளலாம். அதேபோல், குரூப்பின் admin கியூ.ஆர் கோடை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். மியூசிக் ஸ்டிக்கர்ஸ் அம்சம்: இன்ஸ்டாகிராம் டைரைட் மெசேஜில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷனில் மியூசிக்களை நண்பர் களுக்கு பகிரும் வசதி வழங்கப் பட்டுள்ளது. ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை அழுத்தினால், அதில் “Music” என்ற ஆப்ஷன் காண்பிக்கும். அதனை கிளிக் செய்து பயனர்கள் விருப்பப் படும் பாடல் search box-இல் தேடி நண்பர்களுக்கு பகிரலாம்.