சென்னை,ஏப்.11- வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சியினர் பரப்புரையைத் தொடங்கினர்.
வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக 8 வழக்குகளுக்கு மேல் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் குறித்து 1 கோடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டறிக்கை மூலம் சென்னையில் பரப்புரையை மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தொடங்கியுள்ளார்.