tamilnadu

img

சாம்சங் சட்டவிரோத உற்பத்தியை கண்டித்து திருப்பெரும்புதூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருப்பெரும்புதூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், பிப்.25 - சாம்சங் நிறுவனத்தில் தொடரும் சட்டவிரோத உற்பத்தியையும், பல முறை மனு கொடுத்தும் தொழிற்சாலை துறை நட வடிக்கை எடுக்காததை கண்டித்தும் தொழிற்சாலை துறை அலுவலகம் முன்பு செவ்வாயன்று (பிப்.25) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருப்பெரும்புதூரில் நடை பெற்றது. சாம்சங், எஸ்.எச் நிறு வனங்களில் தொடரும் சட்டவிரோத உற்பத்தியை தடுத்து நிறுத்த வேண்டும்,   தொழிற்சாலைகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அலு வலரிடம் சிஐடியு தொழிற் சங்கத்தினர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமை யில் மனு அளித்தனர்.  அந்த மனுவை பெற்றுக் கொண்டு சாம்சங் மற்றும் எஸ்.எச் எலக்ட்ரானிக்ஸ் குறித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எழுத்துப்பூர்வமாக துணை இயக்குநர் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், மாவட்ட நிர்வாகிகள் பி.ரமேஷ், மாவட்டத் துணை தலைவர் ஆர்.கார்த்திக் அ.ஜெனிட்டன், எம்.தினகரன் சாம்சங் சங்க பொதுச் செயலாளர் எல்லன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.'