முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், மூத்த திரைக்கலைஞருமான மு.க. முத்து உடல்நலக்குறைவால் காலமானார்
மு.க.முத்து முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகன் மற்றும் மூத்த திரைக்கலைஞர் அவார். இவர் 1970ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். மேலும் இவர் பிள்ளையோ பிள்ளை, போக்கிரி,இங்கேயும் மனிதர்கள், எல்லாம் அவளே, அணையா விளக்கு, சமையல்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களும் பாடியுள்ளார்.
இவர் கலைஞரின் திரையுலக வாரிசு எனப் பலராலும் பாராட்டப்பட்டவர். இவர் தனது 77ஆவது வயதில் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.