tamilnadu

img

சென்னையில் தொலைதூர பேருந்து சேவைகள் நிறுத்தம்

சென்னை 
கொரோனா பரவல் தடுக்க தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து சென்னையில் இருக்கும் வெளிமாவட்டதைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முதல் குவியத் தொடங்கினர்.

போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், சென்னை போக்குவரத்து நிர்வாகம் மாநகர பேருந்துகளை வெளியூர்களுக்கு இயக்கி நிலைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்ததது. 

இந்நிலையில் 144 தடை உத்தரவு மாலை முதல் அமலுக்கு வருவதால்  சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை போன்ற ஊர்களுக்கான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர், விழுப்புரம், ஆரணி உள்ளிட்ட குறைந்த தூர ஊர்களுக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது.