சென்னை,பிப்.26- 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5000 கோடியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், 5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.