tamilnadu

img

தூய்மைப் பணிகள் தனியார்மயத்தை ரத்து செய்ய கோரிக்கை உள்ளாட்சித் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மறியல்!

நீதிமன்ற உத்தரவுப்படி கூலி உயர்வு வழங்கக் கோரி உள்ளாட்சி ஊழியர்கள் சாலை மறியல்: 1100 பேர் கைது

திருப்பூர், டிச.8- நீதிமன்ற உத்தரவுப்படி  ஊராட்சிகள், பேரூராட்சிகள், நக ராட்சிகள், மாநகராட்சியில் வேலை  செய்யும் ஊழியர்களுக்கு கூலி  உயர்வு வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு திங்களன்று சிஐடியு திருப் பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தி னர் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.   தூய்மைப் பணியை தனியார்  மயமாக்கும் அரசாணைகள் 152,  139 யை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சிகள், பேரூராட்சிகள், நக ராட்சிகள், மாநகராட்சியில் வேலை  செய்யும் ஊழியர்களுக்கு சிஐடியு தொடுத்த நீதிமன்ற வழக்கில் உத் தரவிட்ட அரசாணை 2(டி)62-ன் படி  ஊதியம் வழங்க வேண்டும்.பணி  நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்  தலைமையில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்  450 பெண்கள் உள்ளிட்ட 1100 பேர்  கைது செய்யப்பட்டு, தனியார் மண் டபத்தில் வைக்கப்பட்டனர். அவர் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அகில இந்திய கட்டுப்பாட் டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ் ணன் நேரில் சந்தித்து வாழ்த்தி பேசி னார். இந்த போராட்டத்தின் ஒருபகுதி யாக திருப்பூர்மாநகராட்சி, 9 பேரூ ராட்சிகள், 5 நகராட்சிகள், 100 க்கும்  மேற்பட்ட ஊராட்சிகளில் வேலை  செய்யும் தூய்மைப் பணியாளர்கள்,  தூய்மை காவலர்கள், குடிநீர் பணி யாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 2  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற  சாலை மறியல் போராட்டத்தை சிஐ டியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத்  வாழ்த்தி பேசினார். சிஐடியு விசைத் தறி சம்மேளன மாநில பொதுச்செய லாளர் பி.முத்துசாமி, கட்டுமான சம் மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார், சிஐடியு மாவட்டத்  துணைத்தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், பஞ்சாலை சங்க  மாவட்டச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, சிஐடியு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித் துறை ஊழியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர்  பழனிச்சாமி, உள்ளிட்டோர் பங் கேற்றனர்.