சென்னை, மே 10-உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.வாக்குச்சாவடி விவரங்களை தயாரித்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட, உள்ளாட்சி தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் தொடர்பாக, தமிழக அரசின் அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் எவ்வாறு அமைய வேண்டும், அதில் இடம்பெற்றிருக்க வேண்டிய விவரங்கள், வாக்காளர் பட்டியல் தமிழில் அச்சிடப்படவேண்டும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தலா 2 நகல்கள் வழங்கப்பட வேண்டும், வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பட்டியல் எங்கெங்கு வெளியிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள் அரசாணையில் இடம்பெற்றுள்ளன.