சென்னை, டிச. 3 - மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச நாளையொட்டி (டிசம்பர் 3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது: ‘டிசம்பர் 3’ - மாற்றுத் திறனாளிகள் சர்வதேச நாளுக்காக இந்த ஆண்டின் கருப்பொருளாக, “மாற்றுத் திறனாளி களை உள்ளடக்கி நிலையான எதிர் காலத்திற்காக மாற்றுத் திறனாளி களின் தலைமையை மேம்படுத்துதல்” என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் அரசின் நிர்வாகப் பொறுப்புகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளி லும், பொது அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளிலும் அமர்த்தப்பட வேண்டும் என்பதே இந்த முழக்கத்தின் நோக்கமாகும். எனவே, இந்தியா விலும், தமிழ்நாட்டிலும் இந்த இலக்கை முன்னெடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதியேற்றுள்ளது.
உபகரணங்கள் மீதும் மோடி அரசு ஜிஎஸ்டி மாற்றுத் திறனாளிகள் பயன் படுத்தும் உபகரணங்களின் மீது 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி போட்டுள்ள மோடி அரசாங்கம், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு நேர்மாறாக பயணிக்கிறது. மேலும், 2016-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சட்டத்தை முழுமையாக அமலாக்க வும் தொடர்ந்து போராட வேண்டி யுள்ளது. மாநில அரசுகளால் தரப்படும் மாதாந்திர உதவித் தொகையில் வெறும் 3 சதவிகிதம் பேருக்கு பெயரள வில் ரூ. 300 மட்டும் ஒன்றிய அரசால் தரப்படும் நிலைமை மாறவில்லை, கடந்த 12 ஆண்டுகளாக இந்த தொகை யில் சிறிதளவு உயர்வு கூட இல்லை.
எனவே, மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கி நிலையான எதிர்காலத்தை யும், மாற்றுத் திறனாளிகளின் தலை மையையும் வலுப்படுத்தி, நலன் காக்கும் போராட்டத்தை வலுப்படுத்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோருகிறது. டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துக்களை பொருளுள்ள தாக்கிடுவோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.