tamilnadu

img

8 வழிச்சாலை திட்டம் முதல்வரின் கனவுத்திட்டமா? பிரமேலதாவுக்கு எல்.சுந்தர்ராஜன் கேள்வி

சென்னை, ஏப்.11-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வட சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.வீ.கலாநிதி, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு ஆதரவாக பெரம்பூர் பகுதி 36 வது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் பேசியதாவது:-கஜா புயலில் உயிரையும் உடமையையும் இழந்த பொதுமக்களுக்கு ஆறுதல் சொல்லவராத பாரத பிரதமர் மோடி நடிகையின் வீட்டு நிகழ்ச்சியிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பங்கேற்று நம்மைஅவமானப்படுத்திவிட்டு இப்பொழுது எந்த முகத்தை வைத்துக்கொண்டு கோவையில் வாக்குகேட்க வந்தார் என்று தெரியவில்லை. இயற்கை சீற்றத்திற்கு இழப்பீடு கொடுக்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் மருதமலை முருகனுக்கு அரோகரா என்று கூறி பிரச்சாரத்தை துவக்குகிறார். மருதமலையை ஆட்டைய போட்ட சத்குருவுக்கு ஆதரவாகவும் நிற்கிறார்.இந்திய எல்லையில் பாதுகாப்பாக இருந்த ராணுவ வீரர்களின்தியாகத்தை தேர்தல் பிரச்சாரத்தில் வெட்கமின்றி பயன்படுத்திவருகிறார். சிறுபான்மை மக்களால் தீவிரவாதம் ஏற்படுவதாகவும் அதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்ததாக கூறினார். ஆனால் தீவிரவாதமும் ஒழியவில்லை, கருப்பு பணமும் கைபற்றப்படவில்லை. 42 சிஆர்பிஎப் வீரர்களின் உயிரையும், ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறும் பாஜக அரசாங்கத்தை எந்த அடிப்படையில் நம்புவது.பாஜக நதிகளை ஒன்றாக இணைப்போம் ஆதலால் எங்களுக்குவாய்ப்பு தாருங்கள் என்று கூறியதை கேட்டு ரஜினிகாந்த் பாராட்டுகிறார். அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு மோசடிப்பேர் வழியை ரஜினி ஆதரிப்பது சரியா ரசிகர்களே ஏமாந்துவிடாதீர்கள்.கடந்த 5 ஆண்டு காலத்தில் நதிகளை இணைக்க ஏதாவது பேசினார்களா. 2009, 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நதிநீர்இணைப்பு பற்றி ஏட்டளவில் எழுதப்பட்டுள்ளது. வாஜ்பாய்காலத்திலிருந்து பேசப்பட்டுவருகிறது ஆனால் இவர்கள் ஆட்சிகாலத்தில் குறைந்தபட்சம் ஒரு கமிஷனாவது அமைத்தார்களா. அம்பானிக்கும் அதானிக்கும் காட்டிய அக்கறையில் ஒருவிழுக்காடாவது நதிஇணைப்பு பற்றி பேசினார்களா. கங்கையை சுத்தப்படுத்துகிறோம் என்று கூறி பல நூறுகோடி ரூபாய்களை சுவாகாசெய்துவிட்டனர். கங்கையை சாக்கடையாக்குவதே இந்த ஆன்மீகவாதிகளும் , அகோரிகளும் தான்.8 வழிச் சாலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் அதனை பாதுகாக்கவேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக கூறுகின்றனர். இதிலிருந்து அவர்கள் எவ்வளவு கமிஷன் பெற்றிருக்கிறார்கள் என்றுதெள்ளத்தெளிவாக தெரிகிறது. 8 வழிச்சாலையால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து பத்திரிகையாளர்கள் தேமுதிக கட்சியின் தலைவர் பிரேமலதாவிடம் கேட்டபோது, அது முதலமைச்சரின் கனவுதிட்டம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமானது.அமித்ஷா வீட்டில் ரெய்டு நடத்தாமல் எதிர்கட்சியினர் வீட்டில்நடத்தப்படுகிறது. அமித்ஷாவின் மகனின் சொத்து மதிப்பு தற்போது 50 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. பொய் பித்தலாட்டம் செய்யும் இந்த ஆட்சியை ஒரு நிமிடம் கூட அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக இந்த கூட்டத்திற்கு கே.ஜாகிர்உசேன் தலைமை தாங்கினார். எம்.சுந்தரய்யா வரவேற்றார். பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், சிபிஐ பகுதிச் செயலாளர் ஏ.சுப்பிரமணி, விசிக பகுதிச் செயலாளர் கல்தூண்ரவி, ஏ.ஆர்.ஆர்.மலைசாமி, சிபிஎம் பொறுப்பாளர்கள் எஸ்.ஏ.வெற்றிராஜன், ஜே.பிரமிளா, ஆர்.மோகன் உள்ளிட்ட பலர் பேசினர்.