tamilnadu

மலபார் போர் பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல்

மலபார் போர் பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல்

புதுதில்லி, நவ.9-  இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள குவாமில் நடைபெறும் மலபார் பயிற்சியில் பங்கேற்கிறது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக் கப்பட்ட ஐஎன்எஸ் சஹ்யாத்ரி ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் போர்க்கப்பலாகும். இந்தக் கப்பல் ‘தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த  எடுத்துக்காட்டாகும். இக்கப்பல் பல்வேறு இருதரப்பு பயற்சிகளிலும் பலதரப்பு பயிற்சிகளிலும் பங்கேற்றுள் ளது. மலபார்-2025 பயிற்சியின் துறைமுக கட்டத்தில் செயல்பாட்டு தயார் நிலைப் பயிற்சிகள், பங்கேற்கும் நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெறும். துறைமுக கட்டத்தைத் தொடர்ந்து, கடல் சார் கட்டம் நடைபெறும். இதில் கப்பல்களும் விமானங்களும் கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கும். கூட்டு கடற்படை நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் போன்றவற்றில் கவனம் செலுத் தப்படும்.