tamilnadu

img

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு...

சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப் பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் சண்முகையா பதவி ஏற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப் பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் சன்முகையா போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அதிமுகவின் மோகனை சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகையா தோற்கடித்தார். முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சண்முகையா இரண்டாவது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறார்.தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிப் பிரமாணமும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். உடல்நலக்குறைவால் அந்தக் கூட்டத் தொடரில் சண்முகையா பங்கேற்கவில்லை.வருகிற 21-ஆம் தேதி சட்டப் பேரவை மீண்டும் கூடுகிறது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று ஜூன் 19 காலை சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார்.அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.