election2021

img

புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி 7-ஆம் தேதி பதவியேற்பு....

புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சராக வருகின்ற 7 ஆம் தேதி ரங்கசாமி பதவியேற்கிறார்.

புதுச்சேரி மாநில சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. இதையடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, பாஜக மேலிட தலைவர் நிர்மல் குமார் மற்றும் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. அதன் பிறகுஎடுக்கப்பட்ட முடிவில், ரங்கசாமிக்கு முதல்வர் பதவி அளிப்பது என்றும் அதேபோல் சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர்கள் பதவி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.இருப்பினும் தங்களுக்கு 3 அமைச்சர் பதவிகளை வழங்குங்கள் என்று பாஜக, ரங்கசாமியிடம் வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும் 2 அமைச்சர் பதவி மட்டுமே வழங்க முடியும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனையடுத்து, புதுச்சேரி முதலமைச்சராக வருகின்ற 7 ஆம் தேதி ரங்கசாமி பதவியேற்கிறார்.