தஞ்சாவூர், ஜன.7- பூக்கொல்லையில் உள்ள சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலு வலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு உறுப் பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தேர்தல் அலுவ லரும், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனருமான த.முருகேசன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் 11வது வார்டு கருப்பையா (அதிமுக) முதலாவதாக உறுப்பினராக பதவி ஏற்றார். பின்னர் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திலுள்ள 16 வார்டு உறுப்பி னர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவ்விழாவில் கவிதா (1வது வார்டு), ராஜலட்சுமி (2), அமுதா (3), உமா (4), நாடியம் சிவ.மதிவாணன் (5), மீனவராஜன் (6) அருந்ததி (7), மு.கி.முத்துமாணிக்கம் (8), பாமா (9), முத்து லட்சுமி (10), சாகுல் ஹமீது (12), செய்யது முஹம்மது (13), குழ.செ. அருள்நம்பி (14), அழகுமீனா (15), வி.சுதாகர் (16) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்ட னர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜன் (வ.ஊ) வர வேற்றுப் பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் (கி.ஊ) நன்றி கூறி னார். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றி யுள்ள நிலையில் திமுகவைச் சேர்ந்த மு.கி.முத்துமாணிக்கம் ஒன்றியக்குழுத் தலைவராக பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது.