tamilnadu

img

சோழிங்கநல்லூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 8 - சோழிங்கநல்லூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்  படுத்த வேண்டும் என்று குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் செயல்படக்கூடிய 70 குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஒருங்கிணைந்து, சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப் போர் பொதுநலச் சங்கங்களின் கூட்ட மைப்பு ஞாயிறன்று (மார்ச் 8) உதய மானது. இந்த கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு 20 கோரிக்கைகள் முன்மொழி யப்பட்டுள்ளன. குறிப்பாக, தொகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திலி ருந்து தொகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும், மழைவெள்ளம் தேங்காமல் செல்ல ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடி, பல்லாவரம் இணைப்புசாலை, மேடவாக்கம் இணைப்பு சாலை, கிழக்கு கடற்கரை இணைப்புசாலை ஆகிய 3 இடங்க ளில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப் பட்டுள்ள சுங்கச்சாவடிகளை அரசு அகற்ற வேண்டும். அடிப்படைவசதிகள் ஏற்படுத்திக் கொடுத்த பிறகே, புதிய வீட்டுவரி விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் தீர்மான மாக வலியுறுத்தப்பட்டது. இந்தக்கூட்டத்திற்கு ஒருங்கிணைப் பாளர் டி.ராமன், இணை ஒருங்கிணைப் பாளர் வி.பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பா ளர்களாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயபால், எக்ஸ்னோரா எம்.பி.நிர்மல், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் முனைவர் எஸ்.ஜனகராஜன், குரோம்பேட்டை பொதுநலசங்கத் தலைவர் வி.சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டமைப்பின் தலைவராக டி.ராமனும், பொதுச்செயலாளராக வி.பார்த்திபனும், பொருளாளராக ஜி.கோமதிநாயகம் தேர்வு செய்யப்பட்ட னர்.