tamilnadu

img

அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளி: அரசு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,செப்.21- சென்னை மாநகராட்சி பள்ளி வளா கத்தைச் சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட வச திகள் இல்லாதது குறித்தும் அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, வியா சர்பாடி, கல்யாண புரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில், குடிநீர், கழிப்பிட வசதிகள் இல் லாதது குறித்தும், ஆய்வக பராமரிப்பின் மை குறித்தும் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதா கவும் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில்,  சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண் டுமென்றும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சி, காவல் துறைக் கும் உத்தரவிட்டனர்.