தேனி, செப்.21- வனங்களிலிருந்து பழங்குடி மக்கள், விவசாயிகளை வெளியேற்றி விட்டு, அவற்றை அம்பானி - அதானிக்கு தாரை வார்க்க, பிரதமர் மோடியும் அமித்ஷா வும் திட்டமிட்டுள்ளதாக விவசாயிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் அசோக் தாவ்லே குற்றம் சாட்டியுள் ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்டம் கடமலைக் குண்டுவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அசோக் தாவ்லே பேசினார். அப்போது இதுபற்றி அவர் மேலும் கூறி யதாவது:
உரிமைப் போராட்டங்களை நீதிமன்றம் கூட தடுக்க முடியாது!
‘மேகமலை புலிகள் காப்பகம்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு பிற்போக் குத்தனமான தீர்ப்பை வழங்கியுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இந்த தீர்ப்பை அனுமதிக்க முடியாது. நீதிமன்றத் தீர்ப் புக்கு எதிராக போராட அகில இந்திய விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள் ளது. ஒன்றுபட்ட விவசாயிகள் போராட் டத்தின் மூலம் அதில் வெற்றி பெறுவோம். மக்களின் உரிமைப் போராட்டத்தை நீதி மன்றங்களோ, நாடாளுமன்றமோ தடுத்துவிட முடியாது.
பழங்குடி மக்களை, விவசாயிகளை வனங்களிலிருந்து வெளியேற்றுவது, தேனி மாவட்டத்தில் மட்டுமன்றி, நாடு முழுவதும் நடந்து வருகிறது. ‘புலிகள் சர ணாலயம்’ என்றும், ‘யானை வழித்தடம்’ என்றும் கூறி விவசாயிகளை வலுக்கட்டா யமாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக பாஜக தலைமையிலான மோடி அரசின் ‘புலிகள் பாதுகாப்பு ஆணையம்’ விவ சாயிகளை வெளியேற ஆணையிட்டுள் ளது.
கார்ப்பரேட் கொள்ளைக்காக பழங்குடிகளை வெளியேற்ற சதி!
இதன் உண்மையான நோக்கம், பழங் குடி மக்கள் மற்றும் விவசாயிகளை வெளி யேற்றி விட்டு, வனங்களை அதானி, அம் பானி போன்ற கார்ப்பரேட் முதலாளி களுக்கு தாரை வார்ப்பது தான். அதற் குத் தான் பிரதமர் மோடியும், அமித்ஷா வும் துடித்துக் கொண்டிக்கின்றனர். மோடி அரசின் இந்த தீய திட்டத்தை எப்பாடுபட்டாவது தோற்கடிக்க வேண் டிய கடமை நமக்கு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், ‘சிறப்புப் பொருளாதார மண்டலம்’ என்ற பெயரில் முகேஷ் அம்பானி, மும்பைக்கு அருகே 30 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை அப கரிக்க முயன்றார். இதில் 45 கிராமங்க ளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்து வந்தனர். இதற்கு எதி ராக அகில இந்திய விவசாயிகள் சங்கம் அங்கிருக்கக் கூடிய மக்கள், விவசாயி களைத் திரட்டி மிகப்பெரிய போராட் டத்தை நடத்தியது. 5 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த- மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்றத்தில் இப்பிரச் சனைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி னார். ஒரு லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராடியதன் விளைவு சிறப்புப் பொரு ளாதார மண்டலம் ரத்து செய்யப்பட்டது.
கிடப்பில் போடப்பட்ட சுவாமிநாதன் குழு பரிந்துரைகள்!
ஆதார விலை, நிலம், குத்தகை தவிர வேறு பல பிரச்சனைகளுக்கும் போராட வேண்டியுள்ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை யை அரசு சட்டப்பூர்வமாக நிர்ணயம் செய்ய வேண்டும், அரசு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண் டும். இடுபொருள், உரம், பூச்சி மருந்து களின் விலை பன்மடங்கு உயர்ந்துள் ளது. விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலை உயரவில்லை. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவா மிநாதன் குழு அளித்துள்ள பரிந்துரை களை ஒன்றிய அரசுகள் இதுவரை நிறை வேற்றவில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் 3 லட்சம் விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்ட தை தொடர்ந்து சுவாமிநாதன் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளில், குறைந்த பட்ச கொள்முதல் விலையாக விவசா யிகளுக்கு உற்பத்தி செலவிலிருந்து விலையை ஒன்றரை மடங்கு உயர்த்தித் தர வேண்டும் என கூறப்பட்டது. இது வரை எந்த ஒன்றிய அரசும் இதனை நிறைவேற்ற வில்லை. இதனை அமல் படுத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்த விவசாயிகள் போராட்டம்!
கார்ப்பரேட் ஆதரவு விவசாயிகள் விரோத- 3 வேளாண் திருத்த சட்டங்க ளை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்களை இணைத்து ‘ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ என்ற பெயரில்- நம்முடைய விவசாயிகள் சங்கம் சார்பில் தில்லியில் ஓராண்டாக முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 700 விவசாயிகள் வரை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயிகளை, விவசா யத்தைப் பாதுகாக்க உயிர் நீத்தனர். இப்படி ஓராண்டாக போராடியதன் விளைவு 3 வேளாண் சட்டத் திருத் தங்களையும் மோடி அரசு ரத்து செய்தது.
பயிர்க் காப்பீட்டு திட்டத்தால் விவசாயிகளுக்கு பயனில்லை!
தற்போதுள்ள பயிர்க் காப்பீட்டுக் கொள்கை, இன்சூரன்ஸ் நிறுவனங்க ளுக்கு மட்டுமே லாபமாக உள்ளது. சிறு, குறு விவாசாயிகள், விவசாயக் கூலிகளுக்கு இதனால் எந்தப் பலனும் இல்லை. விவசாயிகள் பயன் பெறும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
இவ்வாறு அசோக் தாவ்லே கூறி னார். அவரின் ஆங்கில உரையை விவசாயிகள் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் துரை ராஜ் மொழியாக்கம் செய்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், தேனி மாவட்டச் செயலாளர் டி. கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் ஆகியோர் பேசினர். மாவட்டத் தலைவர் எஸ்.கே. பாண்டி யன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி. வெங்கடேசன், எம். ராமச் சந்திரன், சு. வெண்மணி, கட்சியின் ஒன்றியச் செயலாளர் போஸ், மலை மாடு வளர்ப்போர் சங்கத் தலைவர் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் இ. பாண்டி நன்றி கூறினார்.