india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமெரிக்கா புறப்பட்டார் மோடி!

புதுதில்லி, செப்.21- மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, பிரத மர் நரேந்திர மோடி, சனிக் கிழமையன்று காலை அமெ ரிக்கா புறப்பட்டுச் சென் றார். அமெரிக்காவின் டெலா வர் மாகாணத்தின் வில்மிங்  டன் நகரில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும், ‘குவாட்’ (Quad) கூட்ட மைப்பின் 4-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்ப தற்கும் அவர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை யும் சந்தித்து பேச்சு நடத்து கிறார். இதுதொடர்பாக தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதி விட்டுள்ள அவர், “குவாட் உச்சி மாநாட்டை ஒட்டி எனது  சகாக்கள் ஜோ பைடன் (அமெரிக்க ஜனாதிபதி), அல்பனீஸ் (ஆஸ்திரேலிய பிரதமர்) கிஷிடா (ஜப்பான்  பிரதமர்) ஆகியோரை சந்திப்  பதை ஆவலுடன் எதிர நோக்கியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

லட்டுவின் ‘புனிதம்’ மீட்கப்பட்டது?!

திருப்பதி, செப்.21- திருப்பதி ஏழுமலை யான் கோயில் பிரசாதமான  லட்டுவில் மீன் எண்ணெய்,  பன்றி உள்ளிட்ட விலங்கு களின் கொழுப்பு சேர்க்கப்  பட்டிருப்பதாகவும், இது ஆய்வில் உறுதியாகி இருப்  பதாகவும் செய்திகள் வெளி யாகி விவாதங்களை ஏற்  படுத்தியுள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்தப்படும் என்று கூறிய மத்திய உண வுத் துறை அமைச்சர் பிரக லாத் ஜோஷி, ஆந்திர அரசி டம் அறிக்கை கேட்டுள்ளார். இந்நிலையில், ‘’ஸ்ரீவாரி  லட்டுவின் தெய்வீகத்தன்  மையும், தூய்மையும் இப் போது கறைபடவில்லை. லட்டு பிரசாதத்தின் புனி தம் மீண்டும் மீட்கப்பட்டது.  லட்டு பிரசாதத்தின் புனி தத்தைப் பாதுகாப்பதில் திருப்பதி தேவஸ்தானம் உறு தியாக உள்ளது’’ என்று திருப்  பதி தேவஸ்தானம் தனது  ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட் டுள்ளது.