india

img

நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டுமா? நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ள நேரிடும்

புதுதில்லி மேற்கு வங்க மாநிலத்தில் 2021இல் சட்டமன்ற தேர் ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்குப் பின் திரிணாமுல் காங்கி ரஸ் - பாஜக குண்டர்கள் மிக மோச மான அளவில் மோதலில் ஈடுபட்டனர். இதனால் மாநிலமே வன்முறை பூமி யாக காட்சி அளித்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக 43 வழக்குகள் மேற்கு வங்க நீதிமன்றங்களில் நிலு வையில் உள்ளன. இந்த தேர்தல் வன்முறை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தது. அதில்,”மேற்கு வங்க நீதி மன்றங்கள் அனைத்தும் விரோதமாக நடந்துகொள்கின்றன. வன்முறை வழக்குகளில் தொடர்பு இருப்ப வர்கள் எளிதாக ஜாமீன் பெறுகின்ற னர். அதனால் அம்மாநில நீதிமன்றங் கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால் மேற்கு வங்க தேர்தல் வன்முறை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்” என மனுவில் குறிப்பி டப்பட்டு இருந்தது. 

இந்த மனு வெள்ளியன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓகா மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. சிபிஐ சார்பில் ஆஜ ரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரான நிலையில், இருதரப்பு வாதத்திற்கு பின்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,”நீங்கள் சொல் வதை நாங்கள் கேட்க வேண்டுமா? மேற்கு வங்கத்தில் உள்ள முழு நீதித் துறை மீதும் சிபிஐ அவநம்பிக்கை கொள்ள முடியாது. அனைத்து நீதி மன்றங்களிலும் நடந்த விசாரணை களில் விரோதப் போக்கைக் கூறும் அறிக்கை மிக மோசமானது. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்து கிறது. இதுபோன்ற வழக்குகள் நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இந்த மனுவை தயாரித்த சிபிஐ அதிகாரிகள் நிபந்த னையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இதுபோன்ற  கடுமையான அவதானிப்புகளைத் தவிர்க்க வேண்டும்” என சிபிஐ சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ். வி.ராஜுவிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அதன்பிறகு,“எதிர்காலத்தில் இது போன்ற தவறான நடவடிக்கை எடுக் கப்படாது” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு  உறுதிய ளித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.