தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது
இலங்கையை ஒட்டிய வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் அது தற்போது சென்னைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.
இது 12 மணி நேரம் நீடிக்கும் எனவும், மணிக்கு 3 கி.மீ. வேகத்தில்தான் நகர்ந்து இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
