tamilnadu

img

மேகதாது அணையை ஒன்றிய அரசு அனுமதிக்காது... துரைமுருகன் தகவல்....

சென்னை:
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு அனுமதி தராது என்று அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.தில்லி சென்ற தமிழ்நாடு நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “மேகதாதுவில் அணைக்கட்ட தமிழகத்தின் கருத்தை கேட்காமல் இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்காது என்று ஷெகாவத் கூறியிருக்கிறார் என்றும் கர்நாடக அரசு ஒப்புதல் வாங்கிவிட்டதால் மட்டும் அணை கட்டி விட முடியாது என்றும் தெரிவித்தார்.தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு தன் னிச்சையாக அணை கட்டியது குறித்தும் புகார் தெரிவித்துள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க கோரிக்கை வைத்துள்ளோம் என்றும்  துரைமுருகன் கூறினார்.