சென்னையில் இன்று (நவ.14) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.110 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.