சென்னை,டிச.29- பொதுத்தேர்வு எழுத வுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங் களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டு ள்ளார். தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளி களில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் மிகக்குறை வான எண்ணிக்கையில் இருப்பதால், அருகிலுள்ள பள்ளிகளில் தேர்வு மையங்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கி.மீ தொலைவுக்குள்ளும், 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ தொலைவுக்குள்ளும் இருக்கும் பள்ளிகளில் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். இந்நிலையில் அந்த ஒருங் கிணைந்த மையங்களில் தேர்வு எழுதவிருக்கும் மாண வர்களின் விவரங்களை தனித்தனியே சேகரித்து தயார்நிலையில் வைக்க அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் அனைத்து பள்ளி களுக்கும் உத்தரவிட்டு ள்ளார்.