tamilnadu

img

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை:
தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால், அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்து முன் னணியினர், ‘கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம்’ என்று தெரிவித்துள்ளதால் சமூக ஆர்வலர் கே. இளஞ்செழியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில், அரசு உத்தரவுக்கு எதிராக எட்டு இடங்களில் பந்தல்கால் நிகழ்ச்சி நடைபெற் றதை சுட்டிக்காட்டிய மனுதாரர், சிலை வைப்போம் விழா நடத்துவோம் என்று மக்களை தூண்டி 
விடுவது சட்ட விரோத குற்றச் செயல் என்றும் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதேபோன்று பத்திரிகையாளர் அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஏற்கனவே பல மாநிலங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர் வலமாக எடுத்துச் செல்லவும் தடைவிதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.நீதிபதிகள் சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் முன்பு  புதனன்று (ஆக.19) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் இளஞ்செழியன் தரப் பில் வழக்கறிஞர் டி.ஆர்.உதய குமார் ஆஜராகி வாதாடினார். அப்போது அவரது வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,தமிழ்நாடு அரசு விநாயகர் சிலை வைத்து வழிபட ஏற்கனவே தடைவிதித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அனுமதியின்றி சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இந்து முன்னணி மிரட்டல்:
கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட உள்ளோம். எனவே வருகிற 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள், கடந்த ஆண்டு எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அங்கு எல்லாம் வைத்து வழிபடுவோம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.