tamilnadu

img

சீனா விஷயத்தில் டிரம்பை நம்பாதீர்கள்..!

புதுதில்லி:
சீனா உடனான எல்லைப் பிரச்சனையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இந்தியா நம்பவேண்டாம்; அவர் இந்தியாவுக்கு உதவமாட்டார் என்று அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் சர்வதேசசெய்திச் சேனல் என்று கூறப்படும்‘வியோன்’ (WION), அண்மையில்ஜான் போல்டனை பேட்டி கண்டு ள்ளது. அந்தப் பேட்டியில் போல்டன் மேலும் கூறியிருப்பதாவது:“இந்திய - சீன எல்லை மோதலின் முக்கியத்துவத்தை டிரம்ப் எந்த அளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்காக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பல பத்தாண்டுகளாக நடக்கும் மோதல்களின் வரலாறு பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று நான் கருதவில்லை. அதிகாரிகள் அவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் முழு தகவலையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பு கிடையாது. மேலும் வரலாற்றுடன் உண்மையில் டிரம்ப் ஒத்துப் போவதில்லை.

டிரம்ப்பை பொறுத்தவரை வணிகத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய நபர். எனவே, அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பிறகு, எந்த பக்கமாக அவர் சாய்வார்என்பதை நம்மால் இப்போது கணித்து விட முடியாது. அவர் மறுபடியும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனா பற்றி அவர் விமர்சிக்கமாட்டார். சீனாவுடன் மிக அதிக அளவுக்கு வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு தான் டொனால்டு டிரம்ப் விருப்பப்படுவார். தேர்தலுக்கு முன்பாக இந்தியா - சீனா விவகாரத்தில் அவர் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்கமாட்டார். அவ்வாறு எடுப்பது அவருக்குமேலும் சிக்கலை வரவழைத்து விடும் என்பதால் மிகவும் ஜாக்கிர தையாகத்தான் கையாள்வார். இந்தக் காலத்தில், இந்தியா விற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரச்சனைகள் முற்றினால், டிரம்ப் சீனாவுக்கு எதிராக இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே அமெரிக்காவின் ஆதரவை, உடனடியாக இந்தியா எதிர்பார்க்க முடி யாது.இவ்வாறு ஜான் போல்டன் கூறியுள்ளார்.