சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல் படுத்தப்படவுள்ளது.தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதிப் பங்களிப்பில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தை சென்னையில் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது.சென்னை-கோவை என இரு இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மண்டல அளவிலான ஒருங் கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் சி.எஸ்.ஆர். நிதி மூலமாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தப்பட உள் ளது குறிப்பிடத்தக்கது.