tamilnadu

img

அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி கண்டனம்!

திமுக எம்.பி கனிமொழி அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பெண்கள் மத்தியில் ஆபாசமாக பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியின் காணொலி தற்போது வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் அவருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளன. திமுக எம்.பி. கனிமொழியும் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. 
எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.