முஸ்லிம், கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஜெயின் சமூகத்தினர் மீது குறிவைக்கும் பாஜக
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கடும் கண்டனம்
பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலம் மும்பை யில் சமீபத்தில் ஜெயின் கோவில் ஒன்று இடிக்கப்பட்டது. என்ன காரணத்திற்காக இடிக்கப்பட்டது என்று இதுவரை எந்த தகவலும் வெளியாக வில்லை. இந்நிலையில், கோவில் இடிப்பு சம்பவத்தின் மூலம் ஜெயின் சமூகத்தின் மீது பாஜக வைத்துள்ள குறி அம்பல மாகியுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தற்போதைய கால கட்டத்தில் நாட்டில் சிறுபான்மையினராக இருப்பதே சாபக்கேடாக மாறி வருகிறது. ஜெயின் சமூகத்தினரிடையே தற்போது நிலவும் பயம், பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆழ்ந்த கவலைக் குரியது. இது உலகளாவிய கவனத்தை யும் கண்டனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெயின் சமூகத்தினர் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. ஜெயின் சமூகத்தின் மீதான அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு வடி வத்தின் ஒரு பகுதியே கோவில் இடிப்பு சம்பவம் ஆகும். மத்தியப் பிரதேசத்தின் சிங்கோலி யின் ஜெயின் துறவிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜபல்பூரில் பாஜக உறுப்பினர்களால் ஜெயின்க ளுக்கு எதிராக வெறுப்புக் கருத்துக்கள் கூறப்பட்டது.
அதே போல் மும்பையில் புனித சிலைகள், வேதங்கள் மற்றும் மதப்புத்தகங்கள் அவமதிக்கப்பட்டு, கோவில் இடிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு எங்கிருந்தாலும் ஜெயின் கோவில்கள், புனித யாத்தி ரைத் தலங்கள், நிறுவனங்களைக் குறி வைத்து இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? பாஜக ஜெயினின் பொதுச் சொத்துக்களை மட்டுமல்ல, அவர்களின் தனியார் சொத்துக்களையும் குறிவைத்து வருகின்றது. சமண சமூகம் எண்ணிக்கையில் சிறிய தாக இருக்கலாம், ஆனால் மக்கள் தொகையில் 90 சதவீதத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பரந்த பிடிஏ கூட்ட ணியின் (பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினரின்) ஒரு பகுதி யாகும். ஜெயின் சமூகத்திற்கு ஆதரவ ளிப்போம். அதிகாரத்தில் இருப்பவர்க ளின் ஊக்கமளிக்காத செயல்கள், ஜெயின் சமூகத்தைப் பலவீனப்படுத் த்தாது. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் ஒற்றுமையாக நிற்கிறோம். ஜெயின் சமூகம் நினைவில் கொள்ள வேண்டும். பாஜக யாருக்கும் விசுவாசமாக இல்லை” என அகிலேஷ் கூறினார்.