states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கர்நாடகாவில் வன்முறை, பதற்றத்தை தூண்டும் ஆர்எஸ்எஸ் - பாஜக

கர்நாடக மாநிலம் ஷிவமோகா வில்ஏப்ரல் 16ஆம் தேதி செட்  (CET) நுழைவு தேர்வு நடை பெற்றது. இந்த தேர்வின் போது 2 மாண வர்களை பூணூலை (பிராமணியர்கள் அணியும் கயிறு) அகற்றும்படி தேர்வு கட்டுப்பாட்டு ஊழியர்கள் அறிவுறுத்தி னர். நீட் தேர்வில் உள்ள வழிமுறை களை சுட்டிக்காட்டியதால்  மாணவர்கள் பூணூலை அகற்றி தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அறிந்த பிராமண சமூகத்தினர் பூணூலை அகற்ற சொன்ன தேர்வு கட்டுப்பாட்டு ஊழியர்கள் மீது நடவடிக்கைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஷிவமோகா மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார் கும்பல் இந்து மக்களை அவமதித்ததாக ஷிவமோகாவில் போராட்டத்தில் ஈடு பட்டு வன்முறை பதற்றத்தை தூண்டி யுள்ளது.

மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும்

 ராஜ் தாக்கரே எச்சரிக்கை

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலத்தில் மோடி அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை அமல்படுத் தப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதலே 3ஆவது மொழிப்பாடமாக இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  மகாராஷ்டிரா அரசின் இந்தி மொழி கட்டாய அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். குறிப்பாக பாஜக கூட்டணி யில் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே,”மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,“மகா ராஷ்டிராவில் இந்தியை 5ஆம் வகுப்பு வரை கட்டாய மொழி பாடமாக்கு வதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அனைத்திலும் இந்தி என்ற ஒன்றிய அரசின் முடிவை ஒருபோதும் அனு மதிக்க முடியாது. இந்தி தேசியமொழி அல்ல. அது நாட்டில் உள்ள மற்ற மொ ழிகளை போல் ஒரு மாநில மொழியே. அதை ஏன் மகாராஷ்டிராவில் தொடக்க கல்வியில் கற்பிக்க வேண்டும். நாங்கள் இந்துக்கள்தான் ; ஆனால் இந்திக்கா ரர்கள் அல்ல. மாநிலத்தை இந்திமய மாக்க விரும்பினால் மிகப்பெரும் போ ராட்டம் வெடிக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.