tamilnadu

img

வாய்ப்பு வாசல்

அங்கன்வாடி மையங்களில் 7,783 பணியிடங்கள்

தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்க ளில் பல்வேறு பணிகளில் 7,783 பேர் தேர்வு செய்யப்பட வுள்ளார்கள்.

 1. அங்கன்வாடி ஊழியர்

காலிப் பணியிடங்கள் - 3,888.  25 வயது முதல் 35 வயதுக்குள் விண் ணப்பதாரர்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. துணை அங்கன்வாடி ஊழியர்

காலிப் பணியிடங்கள் - 305.  25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 12ஆம் வகுப் பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.

3. அங்கன்வாடி உதவியாளர்

காலிப்பணியிடங்கள் - 3, 592. 20 வயது முதல் 40 வயதுக்குள் விண் ணப்பதாரர் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாகக் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்ச்சி :

வயது வரம்பைப் பொறுத்தவரை யில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயதில் தளர்ச்சி வழங்கப்படும்.

தேர்வு முறை :  

இந்தப் பணியிடங்களுக்குத் தகுதி யானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு தபால் மூலமாக அழைப்பு அனுப் பப்படும். நேர்முகத் தேர்வின்போது கல்வித் தகுதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு ஆகிய வற்றைப் பரிசீலிப்பார்கள். விண்ணப்ப தாரர்கள் தமிழில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.  விண்ணப்பிக்கக்கூடிய அங்கன் வாடி மையத்திற்கு அருகில் வசிப்பவராக இருப்பது அவசியமாகும். விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக் கம் செய்து கொள்ள வேண்டும். அதை நிரப்பி, தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலமாக அந்தந்த மாவட்ட அங்கன்வாடி அலுவ லக முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த முகவரிகள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. 

சிஎஸ்ஐஆர் மையத்தில் வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மையத்தின் (Central of Scientific and Industrial Research) கீழ் மத்திய சாலை ஆய்வு மையம் (Central Road Research Institute) இயங்கி வரு கிறது. இதில் உதவி செயலக உதவியா ளர் பணியில் 177 காலியிடங்கள் மற்றும் சுருக்கெழுத்தர் (Stenographer) பணியில் 32 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

உதவி செயலக உதவியாளர்

இந்தப் பணியிடத்திற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண் டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி உண்டு.

சுருக்கெழுத்தர்

இந்தப் பணியிடத்திற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, சுருக் கெழுத்தில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினரு க்கு அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி உண்டு.

தேர்வு முறை

தகுதியானவர்களைத் தேர்வு செய்ய எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பிக்கவும், கூடு தல் விபரங்களைப் பெறவும் http://crri dom.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஏப்ரல் 21, 2025 ஆகும்.

மே 16 அன்று அறிவிக்கை..

மத்தியக் காவல் படைகளில் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை மே 16, 2025 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பற்றாக்குறைப் பணியிட நிரப்புதல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங் கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - I ஏ-க்கான அறிவிக்கை வெளி யாகியுள்ளது. இதில் உதவி வனப்பாது காவலர்களுக்கான பற்றாக்குறைப் பணியிடங்கள் இரண்டை நிரப்புகிறார் கள். ஒருவேளை கூடுதல் பணியிடங்கள் வரலாம் என்றும் அறிவிக்கையில் தெரிவித்துள்ளனர். இது குறித்த விபரங் களை www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.