states

img

உச்சநீதிமன்றத்திற்கு எதிராக வன்மத்தை பரப்பும் ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார் கும்பல்கள்

உச்சநீதிமன்றத்திற்கு எதிராக வன்மத்தை பரப்பும்  ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார் கும்பல்கள்

“ஷரியா கோர்ட் ஆப் இந்தியா”வாம்!

முஸ்லிம் மக்களை ஒடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட வக்பு திருத்தச் சட்ட (ஒருங்கிணைந்த வக்பு மேலா ண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) மசோதாவை எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் எதிர்ப்புகளுக்கு இடையே மோடி அரசு ஏப்ரல் 2 அன்று மக்களவை யில் நிறைவேற்றியது. தொடர்ந்து ஏப்ரல் 3 அன்று மாநிலங்களவையி லும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கடுத்த 2 நாளில், அதாவது ஏப்ரல் 5 அன்று குடியரசுத் தலை வர் திரவுபதி முர்முவும் வக்பு  திருத்த மசோதாவுக்கு உடனடி யாக ஒப்புதல் வழங்கினார். இதை யடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி நாடு முழுவதும் வக்பு திருத்தச் சட்டம் அமலுக்கும் வந்தது. உச்சநீதிமன்றம் குட்டு இத்தகைய சூழலில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் மூலம் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே கூட்டு வழக்காக உச்சநீதிமன்றம்  புதன்கிழமை அன்று விசாரணை க்கு எடுத்துக்கொண்டது. பல்வேறு கட்ட வாதத்திற்கு பின்பு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு,”இந்து அற நிலையத்துறை சட்டப்படி இந்துக் கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். அப்படி இருக்கையில் முஸ்லிம்களின் வக்பு வாரியங்களில் மட்டும் இந்துக்களை நியமிப்பது எதற் காக?” என வக்பு திருத்த சட்டத்து க்கு எதிரான வழக்குகளில் மோடி  அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி யாக கேள்வி எழுப்பியது. தொ டர்ந்து வியாழனன்று,”வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது, ஒன்றிய அரசு 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் மற்றும் வக்பு திருத்த சட்டம் என இரண்டு விவகா ரங்களில் உச்சநீதிமன்றம் மோடி அரசுக்கு எதிராக அடுத்தடுத்து சாட்டையை சுழற்றியுள்ளதால் மிரண்டு போயுள்ள  ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார் கும்பல்கள் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் வன் மத்தை பரப்பும் வேலையை தொடங்கியுள்ளன.

உச்சநீதிமன்றம்  முஸ்லிம் அமைப்பாம்

வக்பு திருத்த சட்டம் தொடர்பாக அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடி யாத பாஜக ஐடி விங்கைச்சேர்ந்த வரும், இந்துத்துவா அமைப்பு களின் வெளியுறவுக் கொள்கை யின் அமைப்பாளருமான சின்ஹா (டுவிட்டர் எக்ஸ் கணக்கின் பெயர்  : மிஸ்டர் சின்ஹா - Mr Sinha) என்பவர் உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கும் நோக்கத்தில் “ஷரியா கோர்ட் ஆப் இந்தியா (sharia court of india)” என தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஷரியா என்பது முஸ்லிம் சட்டவாரியம் ஆகும். இத்தகைய சூழலில் உச்சநீதிமன்றத்தை முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான அமைப்பு எனக் கூறும் வகையில் “ஷரியா கோர்ட் ஆப் இந்தியா” என மிக மோசமான அளவில் சின்ஹா விமர்சித்துள்ளார்.  இதே போல ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார் கும்பல் உச்சநீதி மன்றத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வரு கின்றது. உச்சநீதிமன்றத்தை அவ மதிக்கும் நோக்கத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார் கும்பல்களின் கருத்திற்கு நாடு முழுவதும் அனைத்து தரப்பின ரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.