states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

துணை ஜனாதிபதி தன்கர் அவர்களே, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நீதித்துறையால் இல்லை. அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை அழிக்க முனைகின்ற உங்களைப் போன்றவர்களால் தான் அச்சுறுத்தல் இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

அரசியலமைப்பை பொருத்தவரை உச்சநீதிமன்றத்தின் கருத்துதான் இறுதியானது. ஆளுநர் வழக்கில் 142ஆவது  பிரிவு மூலம் உச்சநீதிமன்றம் முழுமையான நீதியை வழங்கி உள்ளது. ஆளுநருக்கு வீட்டோ எனும் தனி அதிகாரம் இல்லை என்ற முடிவுக்கு உச்சநீதிமன்றம் வந்த பிறகு அரசியலமைப்புக்கு முரணான ஆளுநரின் செயலை அரசியல் சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி சரி செய்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மிரினால் பண்ட்

வாக்குகளை விற்பவர்கள் மறுபிறவியில் மிருகங்களாக பிறப்பார்கள் என பாஜக எம்எல்ஏ உஷா தாக்குரின் கருத்து பழமைவாத சிந்தனையை மட்டும் எடுத்துக்காட்டவில்லை. மோவ்வில் உள்ள பாஜக தலைவர்களுக்கு இடையேயான உட்கட்சி பூசல்களையும் சுட்டிக்காட்டுகிறது.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி

எப்போது நினைத்தாலும், சிறுபான்மையினரின் நிறுவனங்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள முடியும் என்கிற செய்தியைத்தான் வக்பு சட்டம் கொடுக்க முயலுகிறது. அரசியல் சாசன அடிப்படைக்கே ஆபத்தை விளைவிக்கும் செய்தி இது.