tamilnadu

img

பொன்முடியின் கட்சிப் பதவி நீக்கம் - திமுக துணைப் பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம்

பொதுமேடையில் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி, திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். 
பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பெண்கள் மத்தியில் ஆபாசமாக பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியின் காணொலி தற்போது வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் அவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இதற்கு திமுக எம்.பி கனிமொழி, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சாண்முகம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வனத்துறை அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டுள்ளார். பொன்முடிக்கு பதிலாக, திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவாவை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டலின் உத்தரவிட்டுள்ளார்.