கோவை,ஏப்.11- அரசு போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப பயிற்சிக்குச் சென்ற மாணவர்களைக் கழிவறைக்கு பெயிண்ட் அடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு போக்குவரத்துக் கழகத்தின் தொழில்நுட்ப பயிற்சிக்குச் சென்ற ஐடிஐ மாணவர்களை கழிவறைக்கு பெயிண்ட் அடிக்க வைத்த உக்கடம் கிளை(1) மேலாளர் மணிவண்ணனின் செயலுக்கு சிஐடியு உள்ளிட்ட முன்னனி தொழில் சங்கங்கள் தங்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை பணி நீக்கம் எய்ய வேண்டுமெனத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே ஒண்டிப்புதூர் கிளையில் பணியாற்றிய போது, தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபட்டதால் பெரிய அளவில் முற்றுகை போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டதை தொடர்ந்து மணிவண்ணன் உக்கடம் கிளைக்கு பணி மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.