சென்னை,ஜன.28- முதலாம் உலகப் போர் நடந்த 1914-ஆம் ஆண்டு காலகட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ உதவி அளிக்க 1920ஆம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் சர்வ தேச செஞ்சிலுவை சங்கம். இந்த சங்கத்தின் தமிழ் நாடு பிரிவு சார்பில் சென்னை யில் செவ்வாயன்று (ஜன.28) நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு கொண்டாட்டங் களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.3லட்சம் மதிப்புள்ள செயற்கை கால் களையும் அவர் வழங்கினார். மாநிலத்தில் உள்ள பல்வேறு வட்டங்களை சேர்ந்த ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லங் களுக்கு ரூ.15லட்சம் மதிப் புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் டாக்டர் ஹர்ஷ் எல்.மேத்தா, சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கினார். நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு தபால் உறையினை தமிழ்நாடு வட்ட தலைமை தபால் அதிகாரி எம்.சம்பத் முன்னி லையில் ஆளுநர் வெளி யிட்டார். இந்திய செஞ்சி லுவை சங்கத்தின் தலைமை அலுவலக செயலாளர் ஆர்.கே.ஜெயின், துணைத் தலைவர் சங்கர் நாகநாதன், பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம் நஸிருதீன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.