tamilnadu

img

வாரியத்தில் அல்லாத முடி திருத்துவோருக்கு ரூ. 2000 நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை:
நலவாரியத்தில் பதிவு செய்யாமல் முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுவதை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்க ளுக்கும் பொதுமக்களுக்கும் நிவாரண உதவித் தொகை உட்பட பொது விநியோக திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொது மக்களும் பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.முடிதிருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள 14,667 தொழிலாளர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடமளிக்கவில்லை. இதனால் நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டு உள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் முடி  திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும், இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதை போன்றே நிவாரண தொகை வழங்க முடிவு செய்து உள்ளார். அதன்படி முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சி பகுதிகளில் சம்பந்தப் பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் இடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் கடை இருக்கும் இடத்தில் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும்.

அம்மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யவேண் டும். மாவட்ட ஆட்சியர்கள் அம்மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து ஏற்கனவே முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இரண்டு தவணையாக 2000 ரூபாய் ரொக்கமாக வழங்கியது போன்று நலவாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் 2000 ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள் ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாக வருவாய் நிர்வாக ஆணையர் வழங்குவார்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.மத்திய-மாநில அரசுகளில் ஊரடங்கு உத்தரவால் தொடர்ந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் முடிதிருத் தும் தொழிலாளர்கள்  பசி பட்டினியால் வாடி வருவதால் அவர் களை பாதுகாக்க நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.