ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா
திருப்பூர், அக்.10- பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வியாழனன்று உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிமுகப்படுத்தி ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்கவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது என நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பு ஆசிரியர் தெரிவித்தார். இந்த உணவுத் திருவிழாவில், கம்பு லட்டு, கம்பு கொழுக் கட்டை, திணை அல்வா, வாழைப்பூ வடை, ராகி கூழ், ராகி சேமியா, பச்சை பயிறு, தட்டைப்பயிறு, திணை லட்டு, பழக் கலவை, ராகி அடை, தயிர்சாதம், மசால் சுண்டல் உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகள், இயற்கை உணவு வகைகள், பாரம்பரிய உணவுப் பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டி ருந்தன. மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து தயா ரித்துக் கொண்டு வந்த உணவுப் பொருட்களை சக மாணவிக ளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு உணவு வகைகளின் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த உணவு திருவிழா இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.