தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் செவ்வாயன்று (பிப். 25) மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது. இதன் ஒருபகுதியாக சைதாப்பேட்டை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, திமுக மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து செவ்வாயன்று (பிப்.25) தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மாணவர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவொற்றியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், எம்.எம்.செந்தில் (திமுக மாணவர் அணி), இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.அகல்யா, சையத் அலி (மதிமுக மாணவர் அணி), பைசல் (சமூகநீதி மாணவர் இயக்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.