சென்னை, ஜூலை 6- நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக, மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலி யுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்தில் இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை குடியர சுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. ஆனால் இந்த மசோதாக் களுக்கு ஒப்புதல் பெற குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்ககம் அனுப்பவேயில்லை. இந்த தகவல் சிபிஎம் எம்.பி. டி.கே. ரங்கராஜன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் அனுப்பியதன் மூலம் தெரிய வந்தது. மத்திய பாஜக அரசு தமி ழகத்துக்கு தொடர்ந்து பாரபட்சம் காட்டியது வெளிப்பட்டது. நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தால் மாணவி அனிதா முதல் ஆறு பேர் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை மசோதா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை மசோதா என இரு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக அனுப்பி வைக்கப் பட்டது. இதற்காக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தர விடக்கோரி 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிர சாத் அமர்வில் மீண்டும் விசார ணைக்கு வந்தது. 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றதாகவும், அவற்றை 2017ஆம் ஆண்டு செப் டம்பரில் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் மத்திய அர சுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கள் தெரிவித்தனர். மேலும், இரு சட்ட மசோதாக் களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.அதற்கு, இரு சட்ட மசோதாக்களும் நிராக ரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள் ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அர சுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஜூலை 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.