tamilnadu

img

சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு சார்பில் ராயபுரம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாதர் சங்க பகுதிச் செயலாளர் ஜா.ஆபித்துன்னிசா, பொருளாளர் ஜெயலட்சுமி, நிர்வாகிகள் கு.அனுராதா, ராணி, மும்தாஜ், எம். ஷாகின், அம்மு, அமைப்புசாரா நிர்வாகிகள் டி.வெங்கட், எம்.ஜாவித் பாஷா, கட்டுமான சங்க நிர்வாகிகள் பி.செல்வம், எம்.அண்ணாமலை, சேட்டு, தேவராஜன், கே.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  சார்பில் தாங்கல் தர்கா மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா அம்சாபாய் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதித் தலைவர் எஸ்.கஸ்தூரி, செயலாளர் அலமேலு, சிபிஎம் கவுன்சிலர்  ஆர்.ஜெயராமன், வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல் வாகித், டாக்டர் கதீஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவொற்றியூரில் வி.பி. நகரில் 24ஆம் ஆண்டு பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் ரா. செந்தூரன் தலைமையில் நடைபெற்றன.  குடியிருப்போர் நல சங்க ஆலோசகர் பெரியசாமி விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்டச் பொருளாளர் ர.ஸ்டாலின், பகுதி பொருளாளர் ராஜ்குமார், 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், குடியிருப்போர் நல சங்க செயலாளர் ராமமூர்த்தி, சிபிஎம் தெற்கு பகுதிச் செயலாளர் ஆர்.கருணாநிதி, கிளைச் செயலாளர் கவிதா, மாதர் சங்க நிர்வாகி அருள்மொழி, வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகிகள் இளங்கோவன், சரவணன், நித்தியவாணி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதில் நிர்வாகிகள் க.அச்சுதன், சா.விஜியகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், வெங்களாபுரம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மற்றும் வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் ‘பொங்கல் சங்கமம்  திருவிழா  பள்ளி தாளாளர் கூத்தரசன்  தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் சந்தியா, பூங்காவனம், நிர்வாக அலுவலர் கௌரி சங்கர், சிறப்பு விருந்தினராக சின்னத்திரை நடிகர்  கலைவாணர் அமுதவானன்‌ ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 100  விவசாயிகளை அழைத்து பள்ளி நிர்வாகம் சார்பில் கவுரவித்தது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கட்டுமான சங்கம் சார்பில் மணலி சேக்காட்டில் சமத்துவ பொங்கல் விழா கீதா  தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி,  நிர்வாகிகள் உஷா, நீலவேணி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சிட்டிபாபு, பகுதிச் செயலாளர் ரவிச்சந்திரன், அசோக்குமார் (அமைப்புசாரா) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் மாவட்டச் செயலாளர் பி.கே.ரபிக் தலைமையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட பொருளாளர் பி.சண்முகம் மாவட்ட துணைத் தலைவர் ஜான்பாஷா நிர்வாகிகள் குர்ஷித், ரசூல்பாபு,மாவட்ட குழு உறுப்பினர்கள். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என அனைத்து மதத்தினரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.