tamilnadu

img

பதக்கம் வென்ற கடலூர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

பதக்கம் வென்ற கடலூர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கடலூர், ஜன.16 - டாம் அண்ட் டையூ நகரில் ஜனவரி 5ம் தேதி முதல் 10  வரை 2வது கேலோ இந்தியா பீச்  பென்காக் சிலாட் போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்தைச் சுதர்சன், மற்றொரு சுதர்சன்,  லோகேஸ்வரன், செல்வகுமார், போஸ் ராஜ குரு,  ஸ்ரீகாந்த் ஆகிய 6 வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழகத்திற்கு 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்கள். கடலூர் மாவட்ட வீரர்கள் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்தனர்.  பென்காக் சிலாட்  சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் இ.இளையராஜா தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் மாவட்ட பயிற்சியாளர்கள், உறவினர்கள் திரளானோர் கலந்து கொண்டு  சிறப்பான வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.