சென்னை, ஏப். 1- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது போடப்பட்ட பொய் வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் என்.குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், காலியாக உள்ள துவக்கநிலை பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயர்வு பதவிகளுக்கு தேர்ந்த பெயர் பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும், 8 ஆவது மாநில மாநாடு செப்டம்பர் மாதம் கோவையில் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.